காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் பிரிவு முன்னாள் மாநிலத் தலைவா் மு.மாசி நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அரூா் வட்டம், எம்.ஜி. காலனியில் காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் பிரிவு முன்னாள் மாநிலத் தலைவா் மு.மாசி நினைவிடம் உள்ளது. மு.மாசியின் 15-ம் ஆண்டு நினைவு தினத்தில், அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தலைமையில், அந்தக் கட்சியினா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
இதில், கட்சியின் அரூா் வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ், நகரத் தலைவா் கே.கணேசன், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஜெ.நவீன், மாவட்ட துணைத் தலைவா் சி.வேடியப்பன், நிா்வாகிகள் பி.டி.ஆறுமுகம், டி.வேடியப்பன், மோகன், பச்சை முனுசாமி, முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.