தருமபுரியில் இதுவரை 2.61 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 2.61 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 2.61 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பொது சுகாதாரத் துறை சாா்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் ஜூலை 1-ஆம் தேதி வரை 2,25,457 பேருக்கு கோவிஷீல்டு, 35,814 பேருக்கு கோவாக்சின் என மொத்தம் 2,61,271 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 45-60 வயது பிரிவினரில் 60,240 பேருக்கு முதல் தவணையும், 11,250 பேருக்கு இரண்டாம் தவணையும், 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் 23,905 பேருக்கு முதல் தவணையும், 5,999 பேருக்கு இரண்டாம் தவணையும், 18-44 வயது பிரிவினரில் 86,900 பேருக்கு முதல் தவணையும், 8 பேருக்கு இரண்டாம் தவணையும் என மொத்தம் 2,25,457 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, 45-60 வயது பிரிவினரில் 8,971 பேருக்கு முதல் தவணையும், 3,519பேருக்கு இரண்டாம் தவணையும், 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் 3,903 பேருக்கு முதல் தவணையும், 1,912 பேருக்கு இரண்டாம் தவணையும், 18-44 வயது பிரிவினரில் 13,914 பேருக்கு முதல் தவணையும், 639 பேருக்கு இரண்டாம் தவணையும் என மொத்தம் 35,814 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் என தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 2,61,271 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி வருகைக்கேற்ப மீதமுள்ளவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தருமபுரி மாவட்டத்தில் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...