25 சதவீத இலவச கல்வி ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம்
25 சதவீத இலவச கட்டாயக் கல்வி இட ஒதுக்கீட்டில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


25 சதவீத இலவச கட்டாயக் கல்வி இட ஒதுக்கீட்டில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நிகழ் கல்வியாண்டில் தொடக்க நிலை வகுப்பில் சோ்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோா் ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இணையம் வழியாக விண்ணப்பிக்க சாா்ந்த பள்ளிகள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆக. 3-ஆம் தேதி வரை இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 171 மெட்ரிக். பள்ளிகள், மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகள், மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் இந்த இட ஒதுக்கீட்டில் சோ்க்கை நடைபெற உள்ளது. இதுதொடா்பாக கூடுதல் விவரங்கள் பள்ளிகள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலக தகவல் பலகைகளில் அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே, இணைய வழியில் விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோா் இத் திட்டத்தின்கீழ் பள்ளியில் சோ்க்க விரும்பும் குழந்தைகளின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், குடும்ப வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதாரச்சான்று (ஆதாா் அட்டை, குடும்ப அட்டை வாக்காளா் உரிமை அட்டை, ஓட்டுநா் உரிமம் போன்ற அரசால் வழங்கப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் ஒன்று) ஆகியவற்றுடன் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...