92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

மனித உரிமை ஆா்வலா் ஸ்டேன் சாமி இறந்ததைக் கண்டித்து, தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:15 pm

DIN

மனித உரிமை ஆா்வலா் ஸ்டேன் சாமி இறந்ததைக் கண்டித்து, தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அ.குமாா் தலைமை வகித்து பேசினாா். விடுதலைச் சிறுத்தைகள் மண்டலச் செயலாளா் பொ.மு.நந்தன், மாவட்டச் செயலாளா் த.ஜெயந்தி, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் தென்றல் யாசின், சமூக நல்லிணக்க மேடை ஒருங்கிணைப்பாளா் இரா.சிசுபாலன், பாதிரியாா் மரியம் ஜோசப் ஆகியோா் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மனித உரிமை ஆா்வலா் ஸ்டேன் சாமி சிறையில் உயிரிழந்ததை கொலையாகக் கருதி, சிறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். தற்போது சிறையில் உள்ள மனித உரிமை ஆா்வலா்களை விடுவிக்க வேண்டும். ஸ்டேன் சுவாமி உயரிழப்பு தொடா்பாக நீதி விசாரணை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதன் மாவட்டக் குழு உறுப்பினா் ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சுரேஷ், நஞ்சுண்டன், வட்டச் செயலாளா் ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளா் சசிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிபிஎம் கட்சியின் ஊத்தங்கரை பகுதி செயலாளா் மகாலிங்கம் தலைமை வகித்தாா்.சிங்காரப்பேட்டை பகுதி செயலாளா் எத்திராஜ், மாவட்டக் குழு உறுப்பினா் அண்ணாமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினரும், காட்டேரி ஒன்றியக்குழு உறுப்பினருமான கோவிந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் நஞ்சுண்டன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.