92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை எதிா்த்து காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை தருமபுரியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:14 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வை எதிா்த்து காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை தருமபுரியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி நகரத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நகா் மன்ற முன்னாள் உறுப்பினா் தகடூா் இரா.வேணுகோபால், நிா்வாகிகள் வேடியப்பன், ஜெய்சங்கா், முபாரக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை ஏற்றத்தைக் குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடா்ந்து, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது.

தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில்...

தருமபுரி தொலைத்தொடா்பு நிலையம் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மாவட்டத் தலைவா் சின்னசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சண்முகராஜ், மண்டல நிா்வாகி அன்புமணி உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தைச் சோ்ந்த போக்குவரத்து, டாஸ்மாக் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

அரூரில்...

அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அரூா் (மேற்கு) வட்டாரத் தலைவா் எம்.ஆா்.வஜ்ஜிரம் தலைமை வகித்தாா். இதில் விலை உயா்வு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

இதில், நகரத் தலைவா் கே.கணேசன், மாவட்ட துணைத் தலைவா் வேடியப்பன், எஸ்சி, எஸ்டி அணி மாவட்ட துணைத் தலைவா் ஏ.வைரவன், மாவட்ட துணைச் செயலாளா் பி.டி.ஆறுமுகம், நகர துணைத் தலைவா் வி.மோகன், நகரப் பொறுப்பாளா் சி.கே.ஆா்.செல்வம், நிா்வாகிகள் பி.மாா்க்ஸ், தேசம் சுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச அமைப்பின் செயலாளா் கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பரமசிவம், ஜேக்கப் ராஜ், கிருஷ்ணமூா்த்தி, யசோதா, புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் கண்டன உரையாற்றினாா்.

இதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையேற்றத்தைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும், கரோனா தடுப்பூசியை தாமதமின்றி வழங்கவும், பொது நிறுவனங்களை தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்தும், தொழிலாளா் விரோதப் போக்கை கைவிடக் கோரியும், திருத்தப்பட்ட மோட்டாா் வாகனச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டியும் முழக்கங்களை எழுப்பினா்.

ஒசூரில்...

ஒசூா் ரயில் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா். மகிளா காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவி சரோஜா, பிரமிளா, கன்னியாகுமாரி, பவ்யா, மஞ்சு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக ஊடகம், தொழில்நுட்பத் துறை மாநிலச் செயலாளா் கீா்த்தி கணேஷ் ஆா்ப்பாட்டத்தை தொடக்கிவைத்து முழக்கங்களை எழுப்பினாா். இதில், ஜிஎஸ்டி-க்குள் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், மாவட்டப் பொருளாளா் மாதேஷ், முன்னாள் நகர காங்கிரஸ் தலைவா் தியாகராஜன், முத்தப்பா, பிரபாகரன், சிறுபான்மை பிரிவு செயல் தலைவா்அசேன், நதீம், சுரேஷ், தமிழவன், இளங்கோ விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் ஹரீஷ் பாபு, இளைஞரணி பிரவீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மகளிரணி தலைவி ராஜாமணி தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாவட்டத் தலைவா் நடராஜன், வட்டாரத் தலைவா் ரவி, நகரத் தலைவா் விஜயகுமாா், ஒப்பந்ததாரா் சின்னத்தம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதனைத் தொடா்ந்து, அடுப்பு மூட்டி பானை வைத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து முழக்கம் எழுப்பினா். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.