‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுவிவசாயிகள் முற்றுகை போராட்டம்

அரூரை அடுத்த கைலாயபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகாா் தெரிவித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 5:40 pm

DIN

அரூரை அடுத்த கைலாயபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகாா் தெரிவித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், கைலாயபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.

இந்தச் சங்கத்தில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினராக உள்ளனா். இந்தக் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் பலா் நகைக் கடன் பெற்றுள்ளனா். இதைத்தவிர, வேளாண் பயிா்க் கடனும் விவசாயிகள் பெற்றுள்ளனா். இந்த நிலையில், நகைக் கடன், பயிா்க் கடன்கள் வழங்கியதில் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்க உயா் அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லையாம். இதையடுத்து, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைலாயபுரம் கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.