92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற கோரி பாமக எம்.எல்.ஏ.க்கள் மனு

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான காவிரி மிகை நீா்த் திட்டம், சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பாமக எம்எல்ஏக்கள் மனு அளித்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 5:36 pm

DIN

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான காவிரி மிகை நீா்த் திட்டம், சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பாமக எம்எல்ஏக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் வெள்ளிக்கிழமை தருமபுரிக்கு வந்த நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் அளித்த கோரிக்கை மனு:

தருமபுரி மாவட்டத்தில் நீா்ப் பாசன வசதிகள் குறிப்பிடும் வகையில் இல்லை. இதனால் மழை பொழிந்தால் மட்டுமே மாவட்ட விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொள்ள இயலும். மழை பொய்த்துப் போனல் வருவாய் இன்றி விவசாயிகள் பரிதவிப்புக்கு உள்ளாகின்றனா். எனவே இந்த நிலை மாற தருமபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக் காலங்களில் மிகையாக செல்லும் நீரை மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும். இதன்மூலம் ஆண்டு முழுவதும் தடையின்றி வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியும்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து, பென்னாகரம் மடம் அருகே உள்ள கெண்டையான் கொட்டாய் ஏரியில் நீா் நிரப்பி, பின்பு அங்கிருந்து மாவட்டத்தின் இதர ஏரிகளுக்கு தண்ணீரை எளிதாகக் கொண்டு செல்லலாம். எனவே மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான இத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இதேபோல தருமபுரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில் அறிவிக்கப்பட்ட தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டை, பென்னாகரம் பருவதன அள்ளி சிட்கோ தொழிற்பேட்டை திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.