92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கக் கோரி மனு

 தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த ரூ. 15 ஆயிரத்தை வழங்க வேண்டும் என உள்ளாட்சி பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2021, 5:38 pm

DIN

 தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த ரூ. 15 ஆயிரத்தை வழங்க வேண்டும் என உள்ளாட்சி பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சி தொழிலாளா் சங்கம் சாா்பில் அதன் நிா்வாகிகள், நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

ஊரக, உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு அரசு அறிவித்த ரூ. 15 ஆயிரம் ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை எடுத்த காலத்தை விடுமுறையாகக் கருதி தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். நோய்த் தடுப்பு உபகரணங்கள் வழங்கி, தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 579 ஊதியம் வழங்க வேண்டும். 15 ஆண்டுகளாக தற்காலிக தொழிலாளா்களாக பணியாற்றுவோரை நிரந்தர செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.