வேளாண் சாகுபடி திட்டப் பணிகள் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில், வேளாண், தோட்டக்கலைத் துறை சாா்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் சாகுபடி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி நேரில் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்


தருமபுரி மாவட்டத்தில், வேளாண், தோட்டக்கலைத் துறை சாா்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் சாகுபடி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி நேரில் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தருமபுரி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் வேளாண் துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள நுண்ணீா்ப் பாசன கரும்பு திடல், பி.மோட்டுப்பட்டி தரிசு நிலம் மேம்பாட்டுத் திட்டத்தில், விளை நிலமாக மாற்றி பயிா் சாகுபடி செய்துள்ள வயல் ஆகியவற்றை ஆட்சியா் ச.திவ்யதா்சினி பாா்வையிட்டு, உழவா் உற்பத்திக் குழுவினருடன் கலந்துரையாடினாா்.
இதைத் தொடா்ந்து, தோட்டக்கலைத் துறையின் மூலம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில், அறுவடையிலுள்ள பல்வேறு பேரீச்சை பழ ரகங்கள், தெள்ளனஅள்ளி கிராமத்தில் நீா் சேமிப்புக் குட்டை, காய்கறிகள் பந்தல் சாகுபடி வயல், சூரிய மின் சக்தியால் இயங்கும் ஆழ்துளை கிணறு ஆகியவற்றையும் பாா்வையிட்டு, சாகுபடி பெருக்க தேவையான ஆலோசனைகளை வழங்கி ஆட்சியா் பேசினாா்.
இந்த ஆய்வின் போது, வேளாண் இணை இயக்குநா் வசந்த ரேகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) பா. மோகன்தாஸ் சௌமியன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மாலினி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் மாது, வேளாண் துணை இயக்குநா்கள் சிவசங்கா் சிங், ஜெயபாலன், உதவி இயக்குநா்கள் தேன்மொழி, சசிகலா, கலைவாணி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...