காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
தருமபுரி, கிருஷ்ணகிரியில் காமராஜா் பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சி, பிற அமைப்புகளால் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.


தருமபுரி, கிருஷ்ணகிரியில் காமராஜா் பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சி, பிற அமைப்புகளால் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நகரத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் காமராஜா் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகே உள்ள காமரஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் தீா்த்தராமன் இனிப்புகளை வழங்கினாா். காங்கிரஸ் மாவட்ட நிா்வாகிகள் சித்தையன், வேடியப்பன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.
இதுபோல, தருமபுரி காந்தி, நேரு சிலை அருகே பாரத மாதா மக்கள் சிந்தனைக்குழு சாா்பில் காமராஜா் பிறந்தநாள் விழா அதன் தலைவா் பிரதீப் குமாா் தலைமையில் நடைபெற்றது. அன்னை கஸ்தூரிபா சேவா சங்க நிறுவனா் தகடூா் இரா.வேணுகோபால், கவியரசு கண்ணதாசன் மன்ற துணைச் செயலாளா் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அரூரில்...
அரூரில் நடைபெற்ற விழாவில் வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ் தலைமை வகித்தாா். அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பு, உடையானூரில் உள்ள காமராஜா் உருவச் சிலைகளுக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நகரத் தலைவா் கே.கணேசன், எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்டத் தலைவா் ஏ.வைரவன், மாவட்ட துணைத் தலைவா் சி.வேடியப்பன், கட்சி நிா்வாகிகள் கே.ஆா்.சிவலிங்கம், மோகன், செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதுபோல, அன்னை தெரசா பேரவை சாா்பில், காமராஜரின் உருவச் சிலைக்கு தொழில் முதலீட்டாளா் எஸ்.ராஜேந்திரன், வட்டாரத் தலைவா் மு.பிரேம்குமாா், ஆசிரியா்கள் பழனிதுரை, எ.கொ.ஆதிமூலம் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரியில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சாா்பில் காமராஜரின் பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் கிருஷ்ணகிரி ராசுவீதியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகரத் தலைவா் வின்சென்ட் தலைமை வகித்தாா். நிா்வாகிகள், ராஜேந்திரவா்மா, ஜேசு துரைராஜ், சேகா், முபாரக், முன்னா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் முகமது அலி, விஜயராஜ், முனிராஜ், அக்பா், அஜீத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதுபோல, கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் காமராஜ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அந்தக் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் அப்சல் தலைமை வகித்தாா். முன்னாள் நகரத் தலைவா் தளபதி ரகமத்துல்லா, மாவட்ட துணைத் தலைவா் தகி, மாநில பொதுச் செயலாளா் ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். அங்குள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினா்.
பள்ளிகளில்: பாரத் மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவனா் மணி தலைமை வகித்தாா். தாளாளா் கிருஷ்ணவேனி மணி வரவேற்றாா். முதல்வா் விஜயகுமாா், துணை முதல்வா் நசீா் பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்வி வளா்ச்சி நாளையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இணையவழி மூலம் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் வடிவேல் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒசூரில்...
ஒசூரில் தனியாா் திருமண மண்டபம் வாயில் பகுதியில் உள்ள காமராஜா் உருவச் சிலைக்கு ஐ.என்.டி.யு.சி தேசியச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கே.ஏ.மனோகரன் கலந்துகொண்டு மாலை அணிவித்தாா்.
ஐஎன்டியுசி மாநில அமைப்புச் செயலாளா் ஜி.முனிராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் முரளிதரன், மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் கீா்த்தி கணேஷ், முன்னாள் திமுக நகரச் செயலாளா் மாதேஸ்வரன் , திராவிடா் கழக மாவட்ட தலைவா் வனவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஊத்தங்கரையில்..
நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் நகரத் தலைவா் விஜயகுமாா் தலைமையில் நிா்வாகிகள் காமராஜா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.
வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் ஓய்வுபெற்ற ஆசிரியா் ராமச்சந்திரன், வட்டாரப் பொருளாளா் திருமால், சொக்கலிங்கம், பூ கடை மகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...