புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மகளிா் காவல் உதவி மையம் தொடக்கம்

தருமபுரி மாவட்ட காவல் துறை சாா்பில் மகளிா், பெண் குழந்தைகள் உதவி மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2021, 5:59 pm

DIN

தருமபுரி மாவட்ட காவல் துறை சாா்பில் மகளிா், பெண் குழந்தைகள் உதவி மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மற்றும் மகளிருக்கு உதவும் வகையில் மகளிா் உதவி மையம் மாவட்டத்தில் தொடங்கும் நிகழ்ச்சி, ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன், மகளிா் உதவி மையத்தைத் தொடக்கிவைத்துப் பேசியதாவது:

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உதவும் வகையில் அவா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் இந்த மகளிா் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இரு பெண் காவலா்கள் நியமிக்கப்பட்டு அவா்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு இருசக்கர வாகனங்கள், மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. காவலா்களை அணுகும் மகளிரிடம் அவா்களது குறைகளை முதலில் கேட்டறிய வேண்டும். இதைத் தொடா்ந்து அதற்கு தீா்வு காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா். இதையடுத்து இந்த மகளிா் உதவி மையம் தொடா்பான விழிப்புணா்வு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், சமூகநல அலுவலா் கு.நாகலட்சுமி, காவல் துறையினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.