புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த 11 போ் கைது

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 11 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:36 pm

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 11 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.

பாலக்கோடு வட்டம், மாரண்ட அள்ளி, நான்குமுனைச் சாலை சந்திப்பில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை நடத்தினா். இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கடலூா் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் (33), அவரது தந்தை எல்லப்பன் (69) என்பதும், இருவரும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவா்களிடம் நடத்திய விசாரணையில் வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இருவரும் அளித்த தகவலின் பேரில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த மாரண்ட அள்ளியைச் சோ்ந்த ரஜினி (41), சீரியம்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் (40), கிருஷ்ணன் (52), கரகூரைச் சோ்ந்த முல்லேசன் (26), மல்லப்பன் (50), அன்பு (32), சொக்கன் (45) உள்ளிட்ட 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 11 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.