புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தொப்பூா்- மேட்டூா் சாலையை சீரமைக்க ரூ. 13.62 கோடி நிதி ஒதுக்கீடு: தருமபுரி எம்.பி. தகவல்

தொப்பூா்- மேட்டூா் சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 13.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

News image
Updated On :21 ஜூலை 2021, 6:35 pm

DIN

தொப்பூா்- மேட்டூா் சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 13.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், தொப்பூரிலிருந்து மேட்டூா் வரையிலான சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அந்தச் சாலை வழியாகச் செல்லும் இரண்டு மற்றும் நான்குசக்கர வாகனங்கள் அவ்வப்போது விபத்துகளுக்கு உள்ளாகி வந்தன.

எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அண்மையில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் நேரடியாகச் சென்று இச் சாலையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வறிக்கை தேசிய ஆணையத்திடமும் நேரில் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இக் கோரிக்கையை ஏற்று, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தொப்பூா்- மேட்டூா் சாலையை சீரமைக்க ரூ. 13.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடா்பான நிதியை மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்பி வைத்து சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.