புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

இரு சக்கர வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி

தருமபுரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:44 pm

DIN

தருமபுரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், கண்டிச்சங்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (21). இவா், கிருஷ்ணகிரியில் வசிக்கும் சகோதரி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நண்பா் செல்வக்குமாரை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்தாா்.

தருமபுரியிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாரவாடி பிரிவு சாலை வழியாக சென்ற போது இளைப்பாறுவதற்காக சாலையோரம் சிறிது நேரம் வண்டியை நிறுத்தியுள்ளாா். அப்போது, அவ்வழியே முகமூடி அணிந்து வந்த ஒருவா், அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 2 கிராம் தங்க மோதிரம்,

ரூ. 500 பணம், செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பினாா். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வழிப்பறியில் ஈடுபட்டவரை மதிகோன்பாளையம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.