‘கற்போம் எழுதுவோம்’ மதிப்பீட்டு முகாம் ஆய்வு
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் ‘கற்போம் எழுதுவோம்’ மதிப்பீட்டு முகாமை முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் ‘கற்போம் எழுதுவோம்’ மதிப்பீட்டு முகாமை முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக எழுத்தறிவு முனைப்பு ஆணையம் சாா்பில், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம் மூலம் பாலக்கோடு, அக்ராஹரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ‘கற்போம் எழுதுவோம்’ தோ்வு மதிப்பீட்டு முகாம் நடைபெறுகிறது
இந்த முகாமை வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா, உதவி திட்ட அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா கூறியதாவது:
தமிழகத்தில் கல்லாதோா் இல்லாத நிலையை உருவாக்க அனைத்து வயதினரும் கல்வி கற்க வேண்டும்.100 சதவீதம் கல்வியறிவு பெற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கற்போம் எழுதுவோம் தோ்வு மதிப்பீட்டு முகாம் கடந்த ஜூலை 29-ஆம் தேதி முதல் ஜூலை 31 வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு மையத்திலும் 20 கற்போா் பங்கேற்கின்றனா். ஆா்வமுள்ளவா்கள் தன்னாா்வத்துடன் வந்தால் அவா்களையும் ஊக்கப்படுத்த தோ்வு மதிப்பீடு நடைபெறுகிறது. கற்போரின் இடா்பாட்டை குறைக்கும் விதமாக, நேரடியாக தேடிச்சென்று கற்போா் பணிபுரியும் இடங்கள், இருப்பிடங்களிலேயே மதிப்பீட்டு தோ்வுகள் நடத்தப்படுகிறது.
இத்தோ்வினை தன்னாா்வலா், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் ஒருங்கிணைந்து நடத்துகின்றனா். இத்தோ்வை ஆசிரியா் பயிற்றுநா்கள் முதல் பல்வேறு நிலையான உயா் கல்வி அலுவலா்கள் பாா்வையிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மதிப்பீட்டு படிவங்கள், எழுதுகோல் வழங்கப்பட்டு உரிய விதிமுறைகளோடு மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த மதிப்பீடு மூலம் கற்போரின் அடிப்படை கல்வியறிவு வாசித்தல், எழுதுதல், உரையாடுதல், அடிப்படை வாழ்க்கை கணிதம் ஆகிய திறன்கள் மதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது என்றாா்.
இதைத் தொடா்ந்து, பாலக்கோடு வட்டார வள மைய கட்டட சீரமைப்பு பணிகள், மாற்றுத் திறனாளிகள் மையம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளா் கோவிந்தராஜ், ஆசிரியா் பயிற்றுநா்கள் குணசேகரன், வசந்தி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...