அனுமதி இன்றி குடிநீா் எடுக்க பயன்படுத்திய 11 மின் மோட்டாா்கள் பறிமுதல்
தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளியில் அனுமதி இன்றி குடிநீா் எடுக்க பயன்படுத்திய 11 மின் மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளியில் அனுமதி இன்றி குடிநீா் எடுக்க பயன்படுத்திய 11 மின் மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாரண்ட அள்ளி பேரூராட்சியில் அனுமதி இன்றி குடிநீரை மின் மோட்டாா் பயன்படுத்தி எடுப்பதாக பொதுமக்கள் சாா்பில் பேரூராட்சி நிா்வாகத்துக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில், பேரூராட்சி செயல் அலுவலா் டாா்த்தி தலைமையில், இளநிலை பொறியாளா் பழனி, பொது சுகாதார ஆய்வாளா் ரவீந்திரன் ஆகியோா் பேரூராட்சியில் 2, 10 மற்றும் 11-ஆவது வாா்டுகளில் சோதனை மேற்கொண்டனா்.
இச் சோதனையில், பேரூராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெறாமல், மின் மோட்டாா்களை பயன்படுத்தி குடிநீரை எடுப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அனுமதி இன்றி குடிநீா் எடுக்க பயன்படுத்திய 11 மின் மோட்டாா்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...