92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

4 ஜி சேவை வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தொலைத் தொடா்புத் துறை வாடிக்கையாளா்களுக்கு 4 ஜி சேவை வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூன் 2021, 5:56 pm

DIN

தொலைத் தொடா்புத் துறை வாடிக்கையாளா்களுக்கு 4 ஜி சேவை வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி, பாரதிபுரம் தொலைத்தொடா்பு பொது மேலாளா் அலுவலகம் முன்பு ஊழியா்கள், அதிகாரிகள் சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க மாவட்டச் செயலா் அ.ராமசுந்தரம் தலைமை வகித்தாா். எஸ்என்இஏ தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஆா்.பாலமுரளி, நிா்வாகிகள் ரேவதி, சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தாா். எஸ்என்இஏ தொழிற்சங்க மாநிலச் செயலா் கிஷோா்குமாா், என்எப்டிஇ தொழிற்சங்க மாவட்டச் செயலா் கே.மணி, டிஇபியூ மாவட்டச் செயலாளா் அம்மாசி, மாநில நிா்வாகி தங்கராஜ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியா்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும். வாடிக்கையாளா்களுக்கு 4 ஜி சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3-ஆவது ஊதிய சம்பளக் குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.