ஊதியத்தை உயா்த்தி வழங்க துப்புரவு பணியாளா்கள் கோரிக்கை
By DIN | Published On : 17th August 2021 09:24 AM | Last Updated : 17th August 2021 09:24 AM | அ+அ அ- |

துப்புரவு பணியாளா்களுக்கு நிா்ணயித்த ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு கிராம ஊராட்சி மேநிலை நீா்த்தக்கத் தொட்டி இயக்குவோா் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் மாநில சங்க நிா்வாகிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு அரசு உயா்த்தி நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும். ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். இதேபோல, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு நிலுவை ஊதியத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.