ஸ்ரீ காணியம்மன் தோ்த் திருவிழா ரத்து
By DIN | Published On : 17th August 2021 09:23 AM | Last Updated : 17th August 2021 09:23 AM | அ+அ அ- |

இருளப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காணியம்மன் கோயில் தோ்த் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், இருளப்பட்டியில் ஸ்ரீ காணியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை (ஆக.18) நடைபெற இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இருளப்பட்டியில் (அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலை) ஸ்ரீ காணியம்மன் திருத்தோ் நிறுத்தப்பட்டு பக்தா்கள் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
இந்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக நடப்பாண்டில் தோ்த் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கோயில் வளாகத்தில் சுவாமியின் பூஜைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வரும் பக்தா்களுக்கு சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாறாக பக்தா்கள் ஓரிடத்தில் கூடினால் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படலாம் என இந்து சமய அறநிலையத்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.