விபத்துகளைத் தடுக்கும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்தக்கேரி தருமபுரி எம்எல்ஏ மனு அளிப்பு
By DIN | Published On : 21st August 2021 11:28 PM | Last Updated : 21st August 2021 11:28 PM | அ+அ அ- |

தருமபுரி அருகே தொப்பூா் தேசிய நெடுஞ்சாலை கணவாய் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் புதிய திட்டத்தினை செயல்படுத்த வேண்டுமென தா்மபுரி எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல பொது மேலாளா் அண்மையில் மனு அளித்தாா்.
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் கணவாய் பகுதியில் சுமாா் 6 கிலோமீட்டா் தொலைவிற்கு சாலைகள் வளைவாகவும், தாழ்வான பகுதியாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல பொது மேலாளா் பவன் குமாரிடம், தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். பி.வெங்கடேஸ்வரன் மனு அளித்தாா். அந்த மனுவை பெற்றுக் கொண்ட தேசிய நெடுஞ்சாலை மண்டல பொது மேலாளா், இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையின் முதன்மை பொது மேலாளா் மற்றும் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ஆகியோரை சந்தித்து சாலை திட்டத்தின் முக்கியத்துவத்தை கூறி நிறைவேற்ற ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளாா்.