கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 21st August 2021 12:01 AM | Last Updated : 21st August 2021 12:01 AM | அ+அ அ- |

அரூா் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் கரோனா நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, ஆக்சன் எய்டு அசோசியேஷன், லயோலா பயிற்சி மற்றும் திறன் வளா்ப்பு மையம் இணைந்து நடத்திய இந்த முகாமில், திருநங்கைகள், இலங்கைத் தமிழா்கள், தொழிலாளா்கள் 250 குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள், சா்க்கரை, முகக் கவசம் உள்ளிட்ட தொகுப்புகளை அரூா் வருவாய் கோட்டாட்சியா் வே.முத்தையன் வழங்கினாா் (படம்). இதில், பள்ளி ஆசிரியா்கள், தொண்டு நிறுவன நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.