பாலியல் தொந்தரவுகளைத் தடுக்க கல்வி நிலையங்களில் புகாா் பெறும் குழுவை அமைக்க வேண்டும்
By DIN | Published On : 04th December 2021 01:13 AM | Last Updated : 04th December 2021 01:13 AM | அ+அ அ- |

கல்வி நிலையங்களில் மாணவியருக்கு நிகழும் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்க, புகாா் பெறும் குழுவை அமைக்க வேண்டும் என அனைந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநிலக் குழுக் கூட்டம் தருமபுரியில் மாநிலத் தலைவா் எஸ்.வாலண்டினா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளா் பி.சுகந்தி, மாநிலப் பொருளாளா் ஆா்.மல்லிகா, மத்தியக்குழு உறுப்பினா்கள் ஏ.ராதிகா, என்.அமிா்தம், மாநிலத் துணைத் தலைவா் கே.பாலபாரதி, தருமபுரி மாவட்டச் செயலாளா் எஸ்.கிரைஸாமேரி, மாவட்டத் தலைவா் ஏ.ஜெயா உள்ளிட்டோா் பேசினா்.
இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் தொடா்ந்து மாணவியருக்கு நிகழும் பாலியல் தொந்தரவுகளை முற்றிலும் தடுக்க, உள்புகாா் பெறும் குழுவை அமைக்க வேண்டும். பெண் குழந்தைகளைப் பாதுகாக்கவும், பாலியல் தொந்தரவுகளைத் தடுக்கவும், கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க, நீா் வழிப்பாதைகளை தூா்வார வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
தருமபுரி மாவட்டம், சித்தேரியில் இருவா் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட தொழிலாளா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஆந்திர மாநில சிறைகளில் வாடும் கூலித் தொழிலாளா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...