மாற்றுத் திறனாளிகளுக்கு கைப்பந்துப் போட்டி
By DIN | Published On : 04th December 2021 11:21 PM | Last Updated : 04th December 2021 11:21 PM | அ+அ அ- |

மன வளா்ச்சிக் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழக கைப்பந்து அணிக்கு வீரா்கள் தோ்வுப் போட்டி தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சிக்கு, தருமபுரி சிறப்பு ஒலிம்பிக் சங்கத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெ.முத்துக்குமாா் முன்னிலை வகித்தாா். இணைச் செயலாளா் கு.பாலமுருகன் வரவேற்றாா். மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் பியூலா ஜென்சுசிலா போட்டிகளைத் தொடக்கிவைத்தாா்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று விளையாடினா். போட்டிகளில் தோ்வு செய்யப்படுவோா், ஜனவரி மாதம், குஜராத் மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெறவுள்ள மனவளா்ச்சிக் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபெறவுள்ள போட்டிகளில் தமிழக அணி சாா்பில் பங்கேற்று விளையாடவுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...