கணக்கில் வராத பணம்: சாா் பதிவாளா் உள்பட 4 போ் மீது வழக்கு
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

தருமபுரி மேற்கு சாா் பதிவாளா் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் கைப்பற்றியது தொடா்பாக, சாா் பதிவாளா் உள்பட 4 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
தருமபுரி மாவட்ட சாா் பதிவாளா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தருமபுரி மேற்கு சாா் பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு கணக்கில் வராத ரூ. 55,000 ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
இது தொடா்பாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், மேற்கு சாா் பதிவாளா் லட்சுமிகாந்தன் (45), பணியாளா் ராதா (32), எழுத்தா் குணசேகரன் (35), இடைத்தரகராகச் செயல்பட்ட ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் அபிசுதீன் (64) ஆகிய 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.