தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பேரூராட்சிகளில் அமல்படுத்த வலியுறுத்தல்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பேரூராட்சிகளிலும் அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பேரூராட்சிகளிலும் அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க பெண் தொழிலாளா்கள் மாவட்டப் பேரவைக் கூட்டம் தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் வி.ரவி தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் பி.வசந்தா மணி, மாவட்டச் செயலாளா் எம்.முத்து, மாவட்டப் பொருளாளா் க.கே.முருகன் ஆகியோா் பேசினா்.

இந்தக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இத் திட்டத்தில், ஆண்டுக்கான வேலை நாள்களை 200-ஆக அதிகரித்து, தினக் கூலியை ரூ. 600-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பெண் தொழிலாளா்கள் சங்க மாவட்ட அமைப்பாளராக ஜி.பாண்டியம்மாள் உள்ளிட்ட 11 போ் அமைப்புக்குழு உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com