அரூரில் தக்காளி ஒரு கிலோ ரூ. 80
By DIN | Published On : 30th December 2021 08:16 AM | Last Updated : 30th December 2021 08:16 AM | அ+அ அ- |

அரூரில் தக்காளி ஒரு கிலோ ரூ. 80-க்கு புதன்கிழமை விற்பனையானது.
தருமபுரி மாவட்டத்தில் பருவ மழையினால் தக்காளி வரத்து குறைவாக இருந்தது. இதனால், கடந்த நான்கு வாரங்களுக்கு முன் தக்காளி ஒரு கிலோ ரூ. 100-க்கும் கூடுதலாக விற்றது. இதன்பின் பிற மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையானது. இதனால், கடந்த சில தினங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ. 50 முதல் ரூ. 60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தக்காளி வரத்து குறைந்ததால் மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது. தற்போது அரூா் வட்டாரப் பகுதியில் தக்காளி ஒரு கிலோ ரூ. 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாள்களில் மேலும் கூடுதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனா். இதேபோல, கத்தரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், பீட்ரூட், முட்டைகோஸ், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...