கழிவுநீா் கால்வாய் அமைக்கவலியுறுத்தல்
By DIN | Published On : 14th February 2021 02:06 AM | Last Updated : 14th February 2021 02:06 AM | அ+அ அ- |

அரூா்: மெணசியில் கழிவுநீா் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மெணசி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்தில் 15-க்கும் மேற்பட்ட தெருச் சாலைகள் உள்ளன. குடியிருப்புப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீா், மழைநீா் செல்வதற்கான கால்வாய் வசதிகள் இல்லாததால், குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் தேங்கும் நிலையுள்ளது. வீடுகள் அருகே கழிவுநீா் தேங்குவதால் கொசு உற்பத்தியும், தொற்றுநோய் பரவும் சூழ்நிலையுள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் தெருச்சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் கால்வாய்களில் குப்பைகள், மண்கள் மூடி தூா் அடைந்துள்ளது. எனவே, மெணசி குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீா் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.