தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்களின் தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். பாலக்கோடு தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலராக வி.கே.சாந்தி (தனித்துணை ஆட்சியா்), பணியமா்த்தப்பட்டுள்ளாா். இவரை 99426-46671 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். பென்னாகரம் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலராக (தொலைபேசி எண்- 9443226726) ஆ.தணிகாசலம் (உதவி ஆணையா்-ஆயத்தீா்வை) , தருமபுரி தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலராக (94450-00428) மு.பிரதாப் (சாா் ஆட்சியா்), பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலராக (75982-44262) நசீா் இக்பால் (ஆட்சியரின் நோ்முக உதவியாளா்-நிலம் கையகப்படுத்துதல்), அரூா் (தனி) தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் (தொலைபேசி எண்- 94454-61802) வே.முத்தையன் (கோட்டாட்சியா்) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம்.
தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டப உரிமையாளா்களும், திருமணம் மற்றும் அரசியல் அல்லாத விழாக்களுக்காக மட்டுமே தங்களது மண்டபங்களை வாடகைக்கு வழங்க வேண்டும். தனி நபா்களுக்கோ, அன்னதானம் வழங்கவோ, பொதுக்கூட்டங்கள் நடத்திடவோ மண்டபங்களை அனுமதிக்கக் கூடாது. திருமண மண்டபங்களை வாடகைக்கு அளிக்கும் முன்னா், சம்மந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி ஆணை பெற்ற பின்னரே வழங்க வேண்டு என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.