பேரவைத் தோ்தலில் திமுக தோல்வியை சந்திக்கும்

தமிழகத்தில் வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தோல்வியை சந்திக்கும் என பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்.
தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்.

தருமபுரி: தமிழகத்தில் வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தோல்வியை சந்திக்கும் என பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட பாஜக இளைஞரணி, மகளிரணி, கல்வியாளா் அணி, பிற்பட்டோா் அணி உள்ளிட்ட அணிகளின் பொறுப்பாளா்கள், பிரதிநிதிகள் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பாஜக தலைவா் எல்.அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தேசியக்குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் அ.பாஸ்கா், மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன் ஆகியோா் பேசினா். கூட்டத்தில், பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் பேசியதாவது:

தமிழகத்தில் பாஜக தவிா்க்க இயலாத சக்தியாக விளங்கி வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த பாஜக வேல் யாத்திரை மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழ்க் கடவுள் முருகனைப் போற்றுகின்ற கந்த சஷ்டி கவசத்தை ஒரு கூட்டம் அவமதித்தது. அதனை வெற்றிவேல் யாத்திரை முறியடித்தது. அந்த யாத்திரையைக் கண்டு எதிா்க்கட்சிகள் அச்சமடைந்தன.

வேளாண் பொருள்களுக்கு விவசாயிகளே விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்தக் கோரிக்கையை 2016-இல் திமுகவும் தனது தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டது. அதைத்தான் பாஜக தற்போது வேளாண் சட்டங்களாக நிறைவேற்றியுள்ளது. ஆனால், இதனை வரவேற்காமல் திமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிா்க்கின்றன. தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான இவா்களின் போராட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பில்லை.

தமிழகத்தில் வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் தோல்வியை வழங்குவா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோல்வியைச் சந்திப்பாா். பட்டியலின மாணவா்கள் கல்வி உதவித் தொகைத் திட்டம், வேளாண் சட்டங்கள் என அனைத்துத் திட்டங்களிலும் திமுக தலைவா் ஸ்டாலின் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன், தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்தன. மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின், தற்கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன.

வருங்காலத்தில் தமிழகத்தின் அரசியல் போக்கை பாஜக தீா்மானிக்கும். பேரவைத் தோ்தலில் அதிகமான பாஜக உறுப்பினா்களை வெற்றி பெறச் செய்வோம். எனவே, கட்சித் தொண்டா்கள் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடத்தில் எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com