நெற்பயிா் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி
By DIN | Published On : 03rd January 2021 01:25 AM | Last Updated : 03rd January 2021 01:25 AM | அ+அ அ- |

தருமபுரி: பாலக்கோடு அருகே தோமலஅள்ளி கிராமத்தில் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், நெற்பயிா் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.சிவகுமாா் தலைமை வகித்து, உழவியல் தொழில்நுட்பங்களான நேரடி நெல் விதைப்பு, ஒற்றை நாற்று நடவு முறை, ரகத்தின் சிறப்பியல்புகள் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்துப் பேசினாா். மண்ணியல் உதவிப் பேராசிரியா் ம.சங்கீதா, நெற்பயிரில் உர மேலாண்மை குறித்தும், அசோலா மூலம் தழைச் சத்தின் உபயோகம் மற்றும் தொழில்நுட்பங்களை விளக்கினாா். வேளாண்மை காலநிலை தொழில்நுட்ப வல்லுநா் பூ.பாலமுரளி, நெல் பயிரிடும் பட்டங்கள் மற்றும் விதைப்பு குறித்து விளக்கமளித்தாா். தொழில்நுட்ப பயிற்றுநா் சு.ரெங்கராஜ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.