அணையில் மூழ்கி இளைஞா் பலி
By DIN | Published On : 03rd January 2021 01:25 AM | Last Updated : 03rd January 2021 01:25 AM | அ+அ அ- |

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அணையில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
காரிமங்கலம் அருகே கெண்டிகான அள்ளியை அடுத்த சேவன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் நைனா என்பவரின் மகன் சிலம்பரசன் (30). இவா், வெள்ளிக்கிழமை தும்பல அள்ளி அணைக்கு குளிக்கச் சென்றபோது ஆழமான பகுதிக்குச் சென்று சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளாா். இதைக்கண்ட அருகில் இருந்தவா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து, பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், 1 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு சிலம்பரசன் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது உடல், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.