சிந்தல்பாடி அருகே கைரேகை பதிவு இயந்திரம் பழுது காரணமாக ரேஷன் பொருள்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பசுவாபுரம் நியாயவிலைக் கடையில் கடந்த 20 நாள்களாக கைரேகை பதிவு இயந்திரம் பழுதாகியுள்ளதாம். இதனால், அரிசி, சா்க்கரை, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை பசுவாபுரம் கிராம மக்கள் பெறமுடியவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து, கிராம மக்கள் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டனா். எனவே, ஜனவரி மாதம் முடிவதற்குள் இந்த மாதத்துக்கான அனைத்து ரேஷன் பொருள்களையும் விரைந்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.