ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 30th January 2021 02:18 AM | Last Updated : 30th January 2021 02:18 AM | அ+அ அ- |

சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, தருமபுரி மற்றும் பாலக்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநா்கள், பழகுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரியில் நடைபெற்ற இந்த முகாமை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தாமோதரன் தொடங்கி வைத்தாா். இம் முகாமில், ஓட்டுநா்கள், பழகுநா்கள், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி பயிற்சியாளா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனா்.
இதேபோல, பாலக்கோடு, அரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகங்களில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ந.முனுசாமி, ந.மணிமாறன், மு.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.