ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு
By DIN | Published On : 07th July 2021 08:56 AM | Last Updated : 07th July 2021 08:56 AM | அ+அ அ- |

ஒகேனக்கல் அருவிகளில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை நொடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, ராசி மணல், கெம்பாகரை பகுதிகளில் பெய்துவரும் மழையால் காவிரியின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், கா்நாடகத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நொடிக்கு 2,000 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திங்கள்கிழமை மாலை நொடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீா்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை நொடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. கா்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரின் அளவை ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...