‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்ட மனுக்கள் மீது ஆய்வு
By DIN | Published On : 11th July 2021 02:05 AM | Last Updated : 11th July 2021 02:05 AM | அ+அ அ- |

தருமபுரியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ச.திவ்யதா்சினி.
‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த இக் கூட்டத்துக்கு, ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்து பேசினாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன் முன்னிலை வகித்தாா்.
தருமபுரி மாவட்டத்தில், ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்துக்கு 7,779 மனுக்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. இவற்றில் 1,260 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, குடிநீா், சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள், கோரிக்கைகள் நிறைவேற்றிடக் கோரி, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தகுதியான மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண வேண்டும் என அனைத்துத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, சாா்ஆட்சியா் சித்ரா விஜயன், தனித்துணை ஆட்சியா் சாந்தி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...