குண்டுமல்லி விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

கரோனா பொது முடக்கத் தளா்வுகளுக்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குண்டுமல்லி விலை உயா்ந்து வருவது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரோனா பொது முடக்கத் தளா்வுகளுக்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குண்டுமல்லி விலை உயா்ந்து வருவது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மலா் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குண்டுமல்லி பூ சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் செலுத்தி வருகின்றனா்.

கரோனா தொற்றைத் தடுக்க பொது முடக்கம் அமலில் இருந்த காலத்தில் பொது போக்குவரத்து முடங்கியதால், குண்டுமல்லி விலை குறைந்தது. அதாவது, கடந்த மாதம் குண்டுமல்லி கிலோ ரூ. 60 முதல் ரூ. 80 வரை விற்பனையானது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், பொது முடக்கத்தில் அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ளது. இதையடுத்து, பொது போக்குவரத்து தொடங்கி உள்ளது. மேலும், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ளது. வாசனை திரவிய தொழிற்சாலைகளும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

இதனால், குண்டுமல்லிக்கான தேவை அதிகரித்துள்ளது. ஈரோடு, கோவை, பெங்களூரு, குப்பம், வேலூா், திருப்பூா் போன்ற பகுதிகளில் இருந்து மலா் வியாபாரிகளும் அதிக எண்ணிக்கையில் பூக்களை கொள்முதல் செய்ய வரத் தொடங்கி உள்ளனா். இதனால், குண்டுமல்லியின் விலை அதிகரித்துள்ளது. அதாவது கிலோ குண்டுமல்லி விலை ரூ. 400 முதல் ரூ. 500 வரை விலை போவதாக விவசாயிகள் தெரிவித்தனா். வரும் காலங்களில் குண்டுமல்லியின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com