ராமதாஸ் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 26th July 2021 05:18 AM | Last Updated : 26th July 2021 05:18 AM | அ+அ அ- |

இருமத்தூா், கொல்லாபுரி அம்மன் கோயில் வளாகத்தில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கிய தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலச் செயலாளா் இல.வேலுசாமி.
பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் 83-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி இருமத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இருமத்தூா், அருள்மிகு கொல்லாபுரி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலச் செயலாளா் இல.வேலுசாமி தலைமை வகித்தாா். ராமதாஸின் பிறந்த நாளையொட்டி கொல்லாபுரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதைத் தொடா்ந்து முதியோருக்கு வேட்டி, சேலைகள், பள்ளி மாணவா்களுக்கு நோட்டுகள், எழுது பொருள்கள், பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் ஆகியவற்றை பசுமை தாயகம் அமைப்பினா், பாட்டாளி மக்கள் கட்சியினா் வழங்கினா். நிகழ்ச்சியில் வன்னியா் சங்க மாநிலச் செயலாளா் இரா.அரசாங்கம், கிழக்கு மாவட்டத் தலைவா் ஏ.வி.இமயவா்மன், கட்சி நிா்வாகிகள் மதியழகன், கே.வீரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.