மெத்தை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து
By DIN | Published On : 20th June 2021 02:52 AM | Last Updated : 20th June 2021 02:52 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மெத்தை, தலையணை தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமாயின.
காரிமங்கலம் வட்டம், கெரகோட அள்ளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான மெத்தை, தலையணை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்தோணிசாமி என்பவருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில், சனிக்கிழமை பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், நிறுவனத்தில் இருந்த மெத்தை, தலையணை, மூலப்பொருள்கள் மளமளவென எரியத் தொடங்கின.
தகவலின் பேரில் விரைந்து வந்த பாலக்கோடு தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். ஆனால், அதற்குள் நிறுவனத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மெத்தை, தலையணைகள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள் மற்றும் தயாரித்து இருப்பு வைக்கப்பட்டிருந்த மெத்தை, தலையணைகள் முழுவதுமாக எரிந்து நாசமாயின.
மின் பாதையில் ஏற்பட்ட தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.