மின் பாதை பராமரிப்பு: கிருஷ்ணாபுரத்தில் இரண்டு நாள்கள் மின்தடை
By DIN | Published On : 29th June 2021 01:18 AM | Last Updated : 29th June 2021 01:18 AM | அ+அ அ- |

தருமபுரி: மின் பாதை பராமரிப்பு கிருஷ்ணாபுரத்தில் இரண்டு நாள்கள் மின்தடை செய்யப்பட உள்ளது.
தருமபுரி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக ஜூன் 29 மற்றும் ஜூலை 3 ஆகிய இரண்டு நாள்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: கன்னிப்பட்டி, இண்டமங்கலம், நாகசமுத்திரம், எம்.கே.புதூா், வன்னியகுளம், சவுளுப்பட்டி, முருக்கம்பட்டி அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.