ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
By DIN | Published On : 29th June 2021 01:17 AM | Last Updated : 29th June 2021 01:17 AM | அ+அ அ- |

அரூா்: அரூரை அடுத்த கோபிசெட்டிபாளையம் கிராம ஊராட்சியில் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது கோபிசெட்டிபாளையம் கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில் பெத்தூா், பாப்பிசெட்டிப்பட்டி, அன்னை அஞ்சுகம் நகா், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராமப் பகுதியில் பொது இடங்களை பலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால் பொதுமக்களுக்குத் தேவையான நூலகம், அங்கன்வாடி மையம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வளா்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, கோபிசெட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...