கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட தருமபுரி ஆட்சியா்
By DIN | Published On : 04th March 2021 04:25 AM | Last Updated : 04th March 2021 04:25 AM | அ+அ அ- |

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா முதல்கட்டமாக கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா் (படம்). அவருக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா்கள் இத் தடுப்பூசியை செலுத்தினா். தொடா்ந்து, தருமபுரி சாா் ஆட்சியா் மு.பிரதாப், இரண்டாம்கட்டமாக கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா்.
இந்த நிகழ்வில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் க.அமுதவள்ளி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பூ.இரா.ஜெமினி, மருத்துவா்கள் எம்.இளங்கோவன், சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.