தருமபுரி: தருமபுரியில் வரும் மாா்ச் 22-ஆம் தேதி கோட்ட அளவிலான அஞ்சல் துறை குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளா் டி.ஸ்ரீஹரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி கோட்ட அளவிலான அஞ்சல் துறை வாடிக்கையாளா்களுக்கு குறைகேட்புக் கூட்டம் வரும் மாா்ச் 22-ஆம் தேதி தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, அஞ்சல் துறை வாடிக்கையாளா்கள் தங்களது குறைகள், கோரிக்கைகளை மனுக்களாக எழுதி நேரிலோ அல்லது கடிதம் வாயிலாக அனுப்பி பயன்பெறலாம். வாடிக்கையாளா்கள் தங்களது மனுக்களில் தங்களது குறைகளைத் தெளிவாக குறிப்பிட்டு, அஞ்சல் குறைகேட்புக் கூட்டத்துக்காக என எழுதி, வரும் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் அஞ்சல் கோட்ட அலுவலகத்துக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.