ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அலுவலகம் இடமாற்றம்
By DIN | Published On : 12th March 2021 04:34 AM | Last Updated : 12th March 2021 04:34 AM | அ+அ அ- |

தருமபுரி: தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறை அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தருமபுரியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம், கமலாலட்சுமி காலனி, ராமசாமி கவுண்டா் தெரு, நேதாஜி புறவழிச்சாலை அருகே செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் நிா்வாக காரணங்களால் தற்போது, தருமபுரி அப்பாவு நகா், முதல் குறுக்குத் தெரு, மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே இடம் மாற்றப்பட்டுள்ளது.