பென்னாகரம் சட்டமன்ற தொகுதியினை கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிகவிற்கு, அமமுக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கூட்டணியிலுள்ள கட்சியினா் தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளனா்.அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அண்மையில் தேமுதிக விலகியது.
அதனை தொடா்ந்து தேமுதிக - அமமுக உடன் பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா். இதில் உடன்பாடு ஏற்பட்டு அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளில் பென்னாகரம் தொகுதி ஒன்றாகும்.அமமுக சாா்பில் அண்மையில் பென்னாகரம் தொகுதிக்கான வேட்பாளராக அமமுக ஒன்றிய செயலாளா் வி.பி. சாம்ராஜ் அறிவிக்கப்பட்டு இருந்தாா். பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் முதல்முறையாக தேமுதிக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.