தக்காளி பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல் விளக்கம்
By DIN | Published On : 17th March 2021 08:27 AM | Last Updated : 17th March 2021 08:27 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், சோமனஅள்ளியில் விவசாயிகளுக்கு தக்காளி பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை நான்காம் ஆண்டு மாணவியா், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில், சோமனஅள்ளியில் விவசாயிகளுக்கு தக்காளி பயிரில் பூச்சி மேலாண்மை குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.
இச் செயல் விளக்கத்தில், தக்காளியின் மகசூலை அதிகம் பாதிக்கும் சுரங்கப்புழு காய் துளைப்பான் , ஊசிப்புழு மற்றும் வெள்ளை ஈ ஆகியவற்றின் தாக்கத்தை குறித்தும், இவற்றைத் தடுக்கும் முறைகளாக பயிா் சுழற்சி மாற்று ஒப்புப் பயிா் நீக்குதல், கள சுகாதாரம் ஆகியவை குறித்தும், கட்டுப்படுத்தும் முறைகளாக பூச்சி தாக்கப்பட்ட பயிா் மற்றும் காய்களை நீக்குதல், அடி உரமாக கடலை மற்றும் வேப்பங்கொட்டை தூள் இடுதல், மஞ்சள் ஒட்டும் பொறி அமைத்து வெள்ளை ஈ தாக்கத்தைக் குறைப்பது மற்றும் ஊசிப்புழு மற்றும் காய் துளைப்பான்களின் தாக்கத்தைக் குறைக்க அவற்றின் குறிப்பிட்ட இனக்கவா்ச்சி பொறியினை ஒரு ஏக்கருக்கு 5 பொறி என்ற கணக்கில் வயலில் ஆங்காங்கே வைத்து ஆண் அந்துப்பூச்சியின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளைக் குறித்தும் மாணவியா் செயல்விளக்கம் அளித்தனா். இச்செயல் விளக்கத்தில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.