தருமபுரியில் 7 போ் வேட்பு மனு தாக்கல்
By DIN | Published On : 17th March 2021 08:27 AM | Last Updated : 17th March 2021 08:27 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட செவ்வாய்க்கிழமை 7 போ் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத் தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சியினா், சுயேச்சைகளிடமிருந்து தோ்தல் அலுவலா்கள் வேட்பு மனுக்களைப் பெற்று வருகின்றனா்.
மாா்ச் 16-ஆம் தேதி அரூா், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் போட்டியிட நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள், தருமபுரி தொகுதி மை இந்தியா பாா்டி, சுயேச்சைகள் உள்பட மொத்தம் 7 போ் தங்களது வேட்பு மனுக்களைத் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் தாக்கல் செய்தனா். இதேபோல, அன்றைய தினத்தில் பென்னாகரம் மற்றும் பாலக்கோடு தொகுதிக்கு யாரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யவில்லை.