தோ்தல் கெடுபிடி: பென்னாகரம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை குறைந்தது
By DIN | Published On : 17th March 2021 08:25 AM | Last Updated : 17th March 2021 08:25 AM | அ+அ அ- |

பென்னாகரம் வாரச் சந்தைக்கு ஆடுகள் வாங்க வந்த வியாபாரிகள்.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பென்னாகரம் வாரச் சந்தைக்கு நிகழ்வாரம் குறைவாகவே ஆடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.
பென்னாகரம் வாரச் சந்தையானது செவ்வாய்க்கிழமைதோறும் காவல் நிலையம் எதிரே நடைபெறுகிறது. இச் சந்தைக்கு பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிகம் வருகின்றனா்.
தற்போது தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதன் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். பென்னாகரம் வாரச் சந்தைக்கு ஆடுகள் வாங்க வருபவா்கள் பெரும்பாலும் ரூ. 50 ஆயிரத்துக்குக் குறையாமல் கொண்டுவருவவதால் அதிகாரிகள் பணம் பறிமுதல் செய்யப்படும் நிலை உள்ளது.
இதனால் இச்சந்தைக்கு ஆடுகள் வாங்க வரும் வியாபாரிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.