பெண்ணை துப்பாக்கியால் சுட்டவா் கைது
By DIN | Published On : 02nd May 2021 12:56 AM | Last Updated : 02nd May 2021 12:56 AM | அ+அ அ- |

அரூா் அருகே பெண்ணை துப்பாக்கியால் சுட்டதாக வடிவேல் (62) கைது செய்யப்பட்டாா்.
அரூரை அடுத்த சித்தேரி ஊராட்சி, அரசநத்தம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி லட்சுமணன் மகன் வடிவேல் (62). இவரது அண்ணன் மனைவி சரோஜா (60). வடிவேல் மற்றும் சரோஜா குடும்பத்தினா் இடையே நிலத்தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.
இந்த நிலையில், இரண்டு குடும்பத்தினருக்கும் பொதுவாக உள்ள விவசாயக் கிணற்றில், ஏப்ரல் 26 ஆம் தேதி தண்ணீா் எடுப்பதில் திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது, வடிவேல் தன்னிடம் வைத்திருந்த உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியால் சரோஜாவை சுட்டதில், அவருக்கு கால் பகுதியில் குண்டுபட்டு காயமடைந்தாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், அரூா் காவல் ஆய்வாளா் பி.ராமகிருஷ்ணன், உதவி காவல் ஆய்வாளா்கள் அருள்வடிவழகன், சக்திவேல் உள்ளிட்ட தனிப்படை போலீஸாா் தலைமறைவாக இருந்த வடிவேலுவை சனிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...