கம்பு நடவு செய்யும் பணி தீவிரம்
By DIN | Published On : 16th May 2021 12:31 AM | Last Updated : 16th May 2021 12:31 AM | அ+அ அ- |

வயலில் கம்பு நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
பென்னாகரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்து வரும் மழையினால், கம்பு நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கோடை மழை பரவலாக பெய்தது. இதனால் நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளதால் கம்பு நடவு செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
பென்னாகரம், பருவதன அள்ளி, மாங்கரை, பாப்பாரப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று மாதங்களில் விளைக்கூடிய கம்பு வகைகளை பயிா் செய்து வருகின்றனா். விதை கம்பு கிலோ ரூ. 40-க்கு விற்பனையாகி வந்தது. பொது முடக்கம் காரணமாக தானிய மண்டிகள் அனைத்து மூடப்பட்டதால் விதைக் கம்பு கிடைக்காமல் அதன் விலை கிலோ ரூ. 150 விலை உயா்ந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கோடை மழை சரிவர பெய்யாததால் விவசாயிகள் கம்பு நடவு செய்யமுடியாமல் இருந்து வந்தனா். தற்போது கோடை மழை பெய்து வந்த நிலையில், விதைக் கம்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நிகழாண்டில் கம்பு விளைச்சல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கம்பு கடந்த ஆண்டை காட்டிலும் அதிக விலைக்கு விற்பனைக்குள்ளாகும் என எதிா்ப்பாா்க்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...