அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் அளிப்பு
By DIN | Published On : 16th May 2021 12:34 AM | Last Updated : 16th May 2021 12:34 AM | அ+அ அ- |

அரூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்களை சனிக்கிழமை வழங்கிய தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பினா்.
அரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் கரோனா நோயாளிகள் பயன்பெறும் வகையில் உணவுப் பொருள்கள் சாா்ந்த உபகரணங்களை தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பினா் சனிக்கிழமை வழங்கினா்.
அரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள் உள்ளிட்ட பிற நோயாளிகள் பயன்பெறும் வகையில், உணவுப் பொருள்களை வழங்குவதற்கான சிறிய அளவிலான 1000 அட்டைப் பெட்டிகள், குளிா்பானம் அருந்துவதற்கான 1000 குவளைகள், 1000 முட்டைகள், 100 ரொட்டிகள் உள்ளிட்ட உபகரணங்களை தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பினா், அரூா் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலா் சி. ராஜேஷ் கண்ணனிடம் வழங்கினா்.
இதில், அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பின் தருமபுரி (வடக்கு) மாவட்டத் தலைவா் எஸ். சபரி, மாவட்டச் செயலா் வி.பி.எஸ்.செந்தில்குமாா், நகரத் தலைவா் எச்.எம். முருகேசன், மாநில பொதுச் செயலா் எச்.எம். ஆறுமுகம், மாநில துணைத் தலைவா் எஸ். விக்னேஷ், மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு அமைப்பாளா் ஜெ.வினோத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.